சன் டிவி கைப்பற்றிய விஜய் சேதுபதியின் புதிய படம்

விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

Jan 4, 2018, 22:02 PM IST

விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஜய்சேதுபதி பழங்குடி இனத்தவர் உட்பட எட்டு வித தோற்றங்களில் நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெளியான `ஏ..எலும்ப எண்ணி எண்ணி’ லிரிக்கல் வீடியோ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இதன் இசைவெளியீடு மலேசிய நட்சத்திர விழாவில் நடைபெற இருக்கிறது.

சாகச நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகிவரும் இந்தப் படத்தை அம்மே நாராயணா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7சி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தை ஜனவரியில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். தேதி குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

You'r reading சன் டிவி கைப்பற்றிய விஜய் சேதுபதியின் புதிய படம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை