விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டீசர் ரிலீஸ்

by Isaivaani, Jan 4, 2018, 22:03 PM IST

விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மிரட்டலான டீசர் ரிலீசாகி உள்ளது.

தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இதில், விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், மிஷ்கின் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

தற்போது, இந்த படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி உள்ளது. வேம்பு என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் சமந்தா கையில் கத்தியுடன் ஒருவர் கழுத்தில் வெட்ட ஒத்திகை பார்க்கும் காட்சி இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி முதன்முதலாக திருநங்கையாக நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டீஸர் இதோ.. 

You'r reading விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டீசர் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை