கனா படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீசாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடித்துள்ளார். அவருடைய அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார்.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்தபுள்ள மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம், அதனை பாடியது சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆராதனா என்பதால் தான். இதுவரை யூடியூபில் இந்த பாடலை ஐந்தரை கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
கனா படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ளார். ரஜினியின் தீவிர ரசிகனான சிவகார்த்திகேயன் டிசம்பர் 12ம் தேதி அவரது பிறந்த நாளன்று படத்தை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.