அமைதியே வடிவான இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது 25வயது வரை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனே இருந்ததாக தனது சுயசரிதையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தமிழில் அறிமுகமாகி ஆஸ்கார் விருதை வரை வென்று உலகப் புகழ் பெற்றவர். மும்பையில் நேற்று முன் தினம் ஏ.ஆர். ரஹ்மானின் சுயசரிதையான ’நோட்ஸ் ஆஃப் எ ட்ரீம்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை கிரிஷ்ணா த்ரிலோக் என்ற எழுத்தாளர் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் தனது வாழ்க்கையை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார். அதில், தனது தந்தை 9வயதில் இறந்தவிட்ட நிலையில், என் வாழ்க்கையை ஸ்தம்பித்தது என்றார். மேலும், 12-22வயது வரை பல கஷ்டங்களையும் வாழ்க்கையின் துன்பங்களையும் தான் அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.
என் 25 வயது வரை, என்னை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வாட்டியது என்ற அதிர்ச்சி தகவலையும் தனது சுயசரிதையில் பகிர்ந்துள்ளார் ரஹ்மான். திலீப் குமார் என்று வீட்டில் வைத்த பெயர் பிடிக்கவில்லை அந்த பெயரை ஏன் மாற்றினேன் என இதுவரை அதற்கான காரணம் தெரியவில்லை. வாழ்க்கையில் திடீரென வசந்தம் வீசியது போல, பட வாய்ப்புகள் மணிரத்னம் மூலம் கிடைத்தது. என் புயல் அத்தனையும் இசையாக தர முயற்சித்து வருகிறேன் என்றார்.