அண்மையில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், கமலைப் பற்றி கூறியதாவது.
நான் சினிமாவுக்குள் கால் பதிக்கும் முன்னே கமல் கால் பதித்து அதில் அரசனாக வலம் வந்தவர். மிக பெரிய நடிகராக இருந்தார். கிட்டத்தட்ட அன்றைக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார். டான்ஸ், நடிப்பு என எல்லா விஷயங்களிலும் கமல் கலக்கினார். பெண்கள் மத்தியில் கமலுக்கு மிகப்பெரிய கிரேஸ் இருந்தது.
அதோடுமட்டுமின்றி கமல், தமிழ்நாட்டை தாண்டி தென்னிந்தியா முழுவதும் பிரபல நடிகராக இருந்தார். அப்பொழுது கமலோடு சேர்ந்து நடிச்சது மிகப் பெரிய விஷயம் எனக்கு. ஒரு முறை என்னை ஏற்றிக் கொண்டு செல்ல கார் வரவில்லை. அப்போது கமல், செல்லும் காரில் என்னை ஏற்றிக் கொண்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. கமல் எவ்வளவு பெரிய நடிகர், அவரோடு நாம சேர்ந்து கார்ல போறாமா? இது கனவா? இல்ல நிஜமா? என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
அதன்பிறகு நிறைய படங்கள் ஒன்றாக பண்ணினேன். கடவுள் அருளால் இந்த இடத்திற்கு வந்திருக்கேன். அதுக்காக, கமல் இடத்திற்கு வந்துட்டேன்னு நான் சொல்லிக்க முடியாது. கமல் கமல்தான். அவரோட இடமே வேற.
என்று ரஜினிகாந்த் கூறினார்.