ரியல் ஜானகி தேவி நடித்த காட்சியையே நீக்கிய 96 படக்குழு!

by Mari S, Nov 28, 2018, 10:40 AM IST

96 படத்தின் டெலிடட் சீன் எனப்படும் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்சேதுபதி ராமாகவும், த்ரிஷா ஜானுவாகவும் இப்படத்தில் மட்டும் அல்ல பலரது மனங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

திரையில் படம் ஓடிக் கொண்டிருந்த போதே சன் டிவியில் படம் போடப்பட்டாலும், இன்னமும் பல மல்டி பிளக்ஸ் மற்றும் திரையரங்குகளில் ராமையும் ஜானுவையும் காண ரசிகர்கள் அணி திரள்கின்றனர்.

இந்நிலையில், படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை சற்று முன்னர், படக்குழு யூடியூபில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.

எஸ். ஜானகி தேவி என்ற பெயர் கொண்ட நாயகியை நாயகன் உண்மையான பாடகி எஸ். ஜானகி தேவி வீட்டிற்கு அழைத்துச் செல்வதும். வீட்டின் முன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படும் த்ரிஷா, ஜானகி தேவியை நேரில் பார்த்து பேசி, அவர் முன்னாடி பாடும் வாய்ப்பையும் பெறும் அழகிய தருணங்களை எப்படிதான் வெட்ட எடிட்டருக்கு மனம் வந்தது என கமெண்டில் நம்மை போலவே பல ரசிகர்கள் புலம்பியும், திட்டியும் பாராட்டியும் வருகின்றனர்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Cinema News

அதிகம் படித்தவை