பிரியங்கா சோப்ரா திருமணத்தில் திடீர் திருப்பம்!

Advertisement

பாலிவுட் நடிகை  பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளதால் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது

 

இந்தி முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவும், ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனசும் காதலித்து வருகிறார்கள். இவர்களது திருமணம் வருகிற டிசம்பர்  2ம் தேதி ராஜஸ்தானில் நடக்கவுள்ளது.

சமீபத்தில்  நடந்த தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் திருமணம் குறித்து பரபரப்பான பேச்சு இருந்தது. தற்போது பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடிக்கு நடக்க உள்ள திருமணம் தான் இந்திய சினிமாவில் முக்கிய செய்தியாக இருந்து வருகிறது.

பாலிவுட்டில் வளம் வருவது மட்டுமன்றி ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ரா கலக்கி வருகிறார். எனவே பிரியங்காவின் திருமணம் உலக அளவில் பிரபலமான திருமணமாகிவிட்டது. இந்நிலையில் திருமண விழா ஏற்பாட்டில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இவர்களின்  திருமணத்தை ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள உமைத் பவனில் நடத்துவது எனத் திட்டமிடப்பட்டதோடு, சங்கீத நிகழ்ச்சி மற்றும் மெகந்தி சடங்குகளை ஜோத்பூரில் உள்ள மேரான்கர் கோட்டையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடப்பதில் திடீர் மாற்றம் செய்யட்டுள்ளது.

உதய்பூரில் தேர்தல் நடக்க இருப்பதால் உமைத் பவன் மற்றும் மேரான்கர் கோட்டை இடையே திருமண ஊர்வலம் செல்லும்போது  தங்களால் போதிய அளவு பாதுகாப்பு வழங்க முடியாது எனக் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஒரே இடத்திலேயே சங்கீத் நிகழ்ச்சி, மெகந்தி நிகழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் நடத்த பிரியங்கா தரப்பில் தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>