பறவைகளை நேசித்த ரியல் பக்‌ஷி ராஜன் கிழவன் சலீம் அலி யார்?

by Mari S, Nov 29, 2018, 20:43 PM IST

உலகம் முழுவதும் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 2.0 படத்தில் வில்லன் பக்‌ஷி ராஜனாகவும், சாதுவான வயது முதிர்ந்த பறவைகள் ஆர்வலராகவும் அக்‌ஷய் குமார் தனது நடிப்பால் அசத்தியுள்ளார்.

சலீம்அலி

இவரது இந்த கதாபாத்திரத்திற்கான இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா? தனது வாழ்நாளில் 65 ஆண்டுகளை பறவைகளுக்காக அவற்றை ஆராய்வதற்காக அவற்றை காப்பாற்றுவதற்காகவே செலவழித்த இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலிதான்.

”விட்டு விடுதலையாகி நிற்பாய்.. அந்தச் சிட்டுக் குருவியைப் போல”, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என காக்கை, குருவி, மயில் அன்னம், குயில் புறா என மனிதன் ரசித்த பறவை இனங்கள் இன்று அவனால் அல்லது அவனுக்கு தெரியாமல் அல்லது அவனது பேராசையால் அழிந்து வருவதை தோலுரித்து 2.0 படம் காட்டியுள்ளது.

பறவை மீது காதல் ஏற்படுமா? இந்த உலகம் நாம் மட்டுமே வாழ இயற்கையால் படைக்கப்பட்டதா? பறவை நேசித்த இந்தியர் ஒருவரின் கதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்த கிழவன் சலீம் அலி யார்? எதற்காக பறவைகளுக்கு தனது வாழ்நாளில் 65 ஆண்டுகளை செலவிட வேண்டும்? என்ற பல கேள்விகளுக்கு விடை தெரியவேண்டும் என்றால், அவர் எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை முழுவதுமான படித்து முடித்தால் மட்டுமே விடை கிடைக்கும்.

சலீம் அலி

மும்பையில் நவம்பர் 12, 1896- ஆம் ஆண்டு சலீம் அலி பிறந்தார்.சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தனது மாமா வீட்டில் வளர்ந்தார். சிறுவயதில் வேட்டையாடுவது பொழுது போக்கு.  வீட்டருகே துப்பாக்கியால் ஒரு முறை சிட்டுக் குருவியை சுட்டுவிட்டார். குருவி துடித்து துடித்து இறக்க சலீம் அலிக்கு நெஞ்சம் வெடித்து விட்டது.

மனம் திருந்திய சலீம் அலி, அப்படித்தான் பறவைகள் பக்கம் திரும்பினார் சலீம் அலி.  பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் கெளரவச் செயலாளராக இருந்த W S Millard என்பவரிடம் சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்ச்சிக்கு சேர்ந்தார்.  65ஆண்டு கால அர்ப்பணிப்பான உழைப்புக்குப் பிறகு 1996-ம் ஆண்டு சலீம் அலி இறந்தார். 

தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இவரின் பெயரில் பறவைகள் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை