சென்னையில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூலை 2.0 முறியடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான 2.0 பல இடங்களில் மாபெரும் வசூலை ஈட்ட தவறியது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல சில இடங்களில் புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையைகளையும் புரிந்துள்ளது.
சென்னையில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூலான 2.37 கோடி ரூபாய் வசூலை முந்தி முதல் நாள் வசூலாக 2.64 கோடி ரூபாயை 2.0 வசூலித்துள்ளது.
வட இந்தியாவில் 40 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்த்த 2.0 முதல் நாளில் 22 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. ஆனால், படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்களால் இந்த வார இறுதிக்குள் படத்தின் வசூல் பன்மடங்காக பெருகும் என்றே பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணக்கிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 35 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலித்திருக்கும் என்றும், உலக அளவில் படத்தின் வசூல் 100 கோடி அல்லது 95 கோடி ரூபாயை முதல் நாளில் வசூலித்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வசூல் மற்றும் ஞாயிறு வரையிலான வசூல் தான் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டா, இல்லையா என்பதை அறிவிக்கும்.