ரஜினியின்..“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு” பாடல் பொங்களுக்கு ரிலீஸ்

ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவித்தபோது, எனக்கு “ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு” என்று சொன்ன வார்த்தை தற்போது பாடலாக மாறி பொங்களுக்கு ரிலீசாக உள்ளது.

கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், இறுதிநாளான டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி பேசினார். அப்போது பேசிய ரஜினி "இந்த மீடியாக்காரர்களைப் பார்த்துதான் எனக்குப் பயம். இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் மைக்கை நீட்டி உங்க கொள்கைகள் என்னனு கேட்டார். ஒரு நிமிஷம் எனக்கு தலையே சுத்திருச்சு" என்றார்.

ரஜினியின் இந்த வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்திய அளவில் டிரெண்டிங் ஆகவும் ஆனது.

இந்நிலையில், விஜய் ஸ்ரீ இயக்கும் ‘தாதா 87’ என்ற படத்தில் இந்த வார்த்தையை கொண்டு ஒரு நிமிஷம் தலை சுத்தும் என்ற பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் விஜய் ஸ்ரீ எழுதிய இந்தப் பாடலுக்கு லியாண்டர் லீ இசையமைத்து உள்ளார். இந்தப் பாடலை நடிகர் ஜனகராஜின் மகன் நவின் ஜனகராஜ் பாடியுள்ளார். பொங்கல் விருந்தாக இந்தப் பாடல் ரிலீசாக திட்டமிட்டுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds