கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரகொரிய அதிபரைப் போலவே நடந்துகொள்கிறார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங், “கேரள முதல்வர் பினராயி விஜயன் பார்ப்பதற்கும், நடவடிக்கைகளிலும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைப் போலவே நடந்துகொள்கிறார்’ எனக் கூறினார்.
முன்னதாக, ‘கேரள முதல்வர் பினராயி விஜயன், அமெரிக்கா தரும் நெருக்கடிகளை வடகொரிய அதிபர் கிம் நேர்த்தியாக எதிர்கொள்கிறார்’ என பாராட்டும் விதமாக பேசியிருந்தார்.














