என் விஷயத்தில் தலையிடாதவர்களில் ஒருவர் அஜித் குமார், மற்றொருவர் பாலையா என்று இயக்குநர் கே.ந்ஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அஜித்குமார் உட்பட பல முக்கிய நடிகர்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராகவும் கே.எஸ்.ரவிக்குமார் திகழ்கிறார்.
தற்போது ரவிக்குமார் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா – நயன்தாராவை வைத்து ஜெய் சிம்ஹா படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் சங்க்ராந்தியை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “பாலையாவை வைத்து படம் இயக்குகிறீர்களா? அவர் ரொம்ப கோவக்காரர், அவரை வைத்து எப்படி படம் இயக்குவீர்கள் என்று தமிழ்நாட்டில் கேட்டனர். ஆனால் படத்தின் கதை குறித்து பேசும் போதும் சரி, படப்பிடிப்பின் போதும் பாலையாவிடம் நான் கோபத்தை பார்க்கவே இல்லை.
மாறாக நான் தான் படப்பிடிப்பில் அடிக்கடி போகப்பட்டு கொண்டிருந்தேன். இதுவரை நான் 46 முதல் 47 படங்களை இயக்கியிருக்கிறேன். அனைத்து நடிகர்களுமே கதை, காட்சிகள், படப்பிடிப்பு என மாற்றங்களை கொண்டு வர விரும்புவார்கள்.
அதை இப்படி பண்ணலாமா? இதை அப்படி பண்ணலாமா? டயலாக்களை இப்படி மாற்றலாமே? என நிறைய கேட்பார்கள். ஆனால் நான் அதை தவறு என்று சொல்லவில்லை. எதையாவது புதுமையாக, அவர்களை நல்ல விதமாக காட்டுவதற்காக அப்படி கேட்பதில் தவறு இல்லை.
ஆனால் இந்த ஷாட் எதற்கு? இது டயாலாக்கை மாற்றலாமா? என எதிலுமே இரண்டு நடிகர்கள் மட்டும் எனது விஷயத்தில் தலையிட்டதே இல்லை. அவர்களில் ஒருவர் அஜித் குமார், மற்றொருவர் பாலையா” என்றார்.