நடிகர் சூர்யா நடித்து நாளை ரிலீசாக உள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், மேடையில் ரசிகர்களின் காலில் சூர்யா விழுந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நேற்று படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது, சூர்யாவை சந்திக்க ரசிகர்கள் சிலர் மேடை ஏறி, சூர்யாவின் காலில் விழுந்தனர்.
பொதுவாக ரசிகர்கள் காலில் விழும் பழக்கம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. பெரும்பாலான நடிகர்களும் இதனை விரும்புவதில்லை. சமீபத்தில், ரசிகர்களை சந்தித்த ரஜினியும், காலில் விழக்கூடாது என்பதை கோரிக்கையாகவே வைத்தார். இந்நிலையில், மேடை ஏறிய ரசிகர்கள், சூர்யாவின் காலில் விழத் தொடங்கினர். தனது காலில் விழுவதை தடுக்கும் வகையில், நடிகர் சூர்யா ரசிகர்களின் காலில் விழுந்தார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பிறகு, ரசிகர்கள் சூர்யாவின் காலில் விழுவதை நிறுத்தினர்.
இந்த காட்சியின் வீடியோ, இணையத்தளங்களில் வைரலாகி, மக்களிடையே சூர்யா பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
இதோ அந்த வீடியோ..