உருகும் அவெஞ்சர்ஸ், அழிவானா தானோஸ்? எண்ட்கேம் டிரைலர் ரிலீஸ்!

avengers endgame trailer released

Dec 8, 2018, 11:54 AM IST

மார்வெலின் மிக பிரம்மாண்ட படமான அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலர் வெளியாகியுள்ளது.

அவெஞ்சர் இன்பினிட்டி வார் படத்தில் உலகில் உள்ள 50 சதவீதம் பேரை ஒரு சொடுக்கில் தானோஸ் அழித்து விடும் நிலையில், படம் முடிந்து விடும். அந்த ஒரு சொடுக்கில், ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், பிளாக் பாந்தர் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்களும் அழிந்து விடுவார்கள்.

இந்நிலையில், உலகின் சரி பாதி மக்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியவில்லையே என மிஞ்சியுள்ள அவெஞ்சர்ஸ்களான அயன்மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, பிளாக் விடோ உள்ளிட்டோர் தங்களது இயலாமையை எண்ணி புலம்பும் விதமாக இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைலரின் இறுதியில், ஆண்ட்மேன் வருவது போன்ற காட்சியும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த டிரைலரில் கேப்டன் மார்வெல் வருவதை அவர்கள் காட்டவில்லை. மேலும், பல காட்சிகளை ரிவீல் செய்யாமல் அற்புதமாக இந்த டிரைலரை வடிவமைத்துள்ளனர்.

You'r reading உருகும் அவெஞ்சர்ஸ், அழிவானா தானோஸ்? எண்ட்கேம் டிரைலர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை