ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 15ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் 250 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் மூன்று விக்கெட்டுக்களை அஸ்வின் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். டிராவிஸ் - மிட்செல் ஜோடி ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்கவில்லை.
ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய ஸ்டார்க் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக, ஆஸ்திரேலிய அணி 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நாதன் லயன் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதன்பின் இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, ஷமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்க உள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியாவை விட ஆஸ்திரேலியா 15 ரன்கள் பின்தங்கி உள்ளது.
எனவே, இந்திய அணி சிறப்பாக ஆடும்பட்சத்தில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.