யுவன் வரிகளில் தெறிக்கவிடும் மாரி கெத்து பாடல்!

maari gethu second single release

Dec 8, 2018, 12:16 PM IST

யுவன் ஷங்கர் ராஜா பாடல் வரிகளில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் மாரி கெத்து பாடலை தற்போது தனுஷ் வெளியிட்டார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படம் அடுத்த வாரம் டிசம்பர் 21ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிளான ரெளடி பேபி வெளியாகி 1.3 கோடி பார்வையாளர்களை கடந்து ட்விட்டர் டிரெண்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் செகண்ட் சிங்கிளான மாரி கெத்து பாடலை ரிலீஸ் செய்து வைரலாக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலுக்கு லிரிக்ஸ் எழுதி இசையமைத்துள்ளார். கிருஷ்ணா, தனுஷின் புகழை பாடி ஆடும் ஓபனிங் பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading யுவன் வரிகளில் தெறிக்கவிடும் மாரி கெத்து பாடல்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை