மிஸ் க்ரானி என்னும் கொரியன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா தற்போது நடித்து வருகிறார்.
2014 ஆம் ஆண்டு வெளியான கொரியன் படம் மிஸ் க்ரானி இந்த படம் சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா என பல மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இது இந்தியாவில் முதன்முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார், மேலும் நாக சவுரியாவும் இந்த படத்தில்முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் ஃபேண்டசி கலந்த காமெடி படம் என்பதால் வயதான மூதாட்டி மற்றும் 20 வயது பெண்மணி என இரண்டு வேடங்களில் சமந்தா கலக்கி வருகிறார்.
இந்த படத்தை சமந்தாவின் தோழியான நந்தினி ரெட்டி இயக்கிவருகிறார். சமந்தா நடிப்பதால் தமிழிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளது.
கணவனை இழந்த 74 வயதான மூதாட்டி ஒருத்தி தான் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதை அறிந்து வீட்டை விட்டு வெளியேருகிறாள் ஒரு போட்டோ ஸ்டுடியோக்குள் நுழைந்த அவள் திடீரென 20 வயது பெண்ணின் தோற்றத்தை பெறுகிறாள். அதன்பின் நடக்கும் சிக்கல்களை நகைச்சுவையுடன் திரைக்கதையாகஅமைத்துள்ளார்கள். மேஜிக் நிறைந்த இந்த படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கவரும் என படக்குழு தெரிவித்தது.
2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் வெளியான இந்த படம் 8.65 மில்லியன் டிக்கெட்டுகளை விற்று மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் படைத்தது.