உலக அளவில் பிரபலமான ரகசிய போலீஸ் கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் 007 போதை ஆசாமியின் கதாபாத்திரம் என கூறப்படுகிறது.
ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரம் ஒரு ஓவர் குடிகார கதாபாத்திரம் என நியூசிலாந்தை சேர்ந்த ஒடாகா பல்கலைக் கழக மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கான ஆய்வு ஒன்றை நடத்தி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆய்வுக்காக முதல் பரிசையும் அவர்கள் தட்டிச் சென்றது,உலகளவில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் மீதான சர்ச்சையை தூண்டியுள்ளது.
அனைத்து 007 நடிகர்களும், கையில் மது மற்றும் மாது இல்லாமல் இருந்ததே இல்லை. அதிலும், டேனியல் கிரெய்க், குவாண்டம் ஆஃப் சொலேஸ் படத்திற்காக உயிரை பறிக்கக் கூடிய அளவான 20 யூனிட் மதுவை விமான காட்சி ஒன்றிற்காக குடித்துள்ளாராம்.
இது போல, அயர்ன்மேன் கதாபாத்திரமான டோனி ஸ்டார்க் கதாபாத்திரமும் குடிகார கதாபாத்திரம் தானாம்.
இந்த செய்தி வெளியானது முதல் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரங்களுக்கு எதிரான அலை எழுந்துள்ளது. ஆனால், ஒரு ஸ்டைல் மற்றும் மாஸ் கலந்த சீக்ரெட் ஏஜெண்ட் கதாபாத்திரத்திற்காக மது குடிக்கும் பழக்கம் உடைய கதாபாத்திரமாக 007 உருவாக்கப்பட்டதாக விளக்கங்கள் எழுந்துள்ளன.