சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலரை வெளியிட்டார் சூர்யா!

silukuvarpattisingam trailer release

Dec 13, 2018, 19:06 PM IST

விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலரை சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ராட்சசன் எனும் செம த்ரில்லான படத்தை கொடுத்து ஐஎம்டிபியில் இந்த ஆண்டின் சிறந்த பட வரிசையில் இந்திய அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் பட பாணியில் மீண்டும் விஷ்ணு காமெடியில் களம் இறங்கியுள்ளார்.

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில், ரெஜினா கஸாண்ட்ரா நாயகியாகவும், பிக்பாஸ் புகழ் ஓவியா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். காமெடிக்கு யோகிபாபு, லொள்ளு சபா மனோகர், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அடுத்த வாரம் வெளியாகவுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டிரைலரை துரைசிங்கமாக நடித்த சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டார். டிரைலரில் பல கெட்டப்புகளில் விஷ்ணு விஷால் வந்து காமெடி செய்கிறார். யோகி பாபுவின் பஞ்ச்கள் சிரிக்க வைக்கின்றன.

You'r reading சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலரை வெளியிட்டார் சூர்யா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை