விஷால் மீது பாண்டிபஜார் போலீசார் இருபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சங்கப் பொருளாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலின் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் தி.நகரில் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு வந்த எஸ்.வி. சேகர், ரித்திஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலக கேட்டுக்கு பூட்டுப் போட்டு, சாவியை முதல்வரிடம் தருவதாக கூறினர். பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சாவி ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அந்த பூட்டை உடைத்து அலுவகத்துக்குள் செல்ல முயற்சி செய்த நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலை போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்திருந்தனர். இந்நிலையில், தற்போது விஷாலை போலீசார் விடுதலை செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுதல் மற்றும் பிரச்சனைக்குரிய சொத்துக்கள் குறித்து அமைதியை குலைத்தல் என இரு பிரிவின் கீழ் சென்னை, பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.