ஏம்மா சீரியல கூட விடமாட்டீங்களாம்மா.. விஜய் டிவி சீரியலை காப்பியடித்த சன் டிவி!

sunTV copied vijayTV serial

Dec 21, 2018, 17:56 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு போட்டியாக அல்லது அதையே காப்பியடித்து லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற புதிய சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

சன் டிவி உள்ள நாடகங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு சேனலில் பார்த்தது போன்று தான் இருக்கும். தற்போது லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற ஒரு புதிய தொடரை வெளியிடுகிறது சன் டிவி.

ஆனந்தம் படத்தின் காப்பி என விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னதாக டிரோல் செய்யப்பட்டு மீம்கள் பறந்தன. இந்நிலையில், அந்த சீரியலுக்கு போட்டியாக அதனையே காப்பி அடித்து சன் டிவி தனது சேனலில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இந்த சீரியலை தயாரித்துள்ளது.

குஷ்பு மற்றும் சுரேஷ் இந்த சீரியலில் லீடு ரோல் செய்கின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளினி நக்‌ஷத்ரா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த சீரியலின் புரொமோ வீடியோவை சன் டிவி வெளியிட்ட அடுத்த நொடியில் இருந்து, அனைத்தையும் கண்ட்ரோல் ப்ளஸ் சி என காப்பி அடித்துவிடுவதே சன் டிவியின் வேலை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

You'r reading ஏம்மா சீரியல கூட விடமாட்டீங்களாம்மா.. விஜய் டிவி சீரியலை காப்பியடித்த சன் டிவி! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை