பணக்காரனாத்தான் சாகணும் – கேஜிஎஃப் விமர்சனம் !

KGF movie review

Dec 22, 2018, 09:03 AM IST

கன்னட நடிகர் யஷ் நடிப்பில், உருவாகியுள்ள கேஜிஎஃப் படம், பணக்காரனாக துடிக்கும் ஒரு இளைஞனின் மாறுபட்ட கதை.

என்னடா இது கேஜிஎஃப் ஹீரோ யஷ் என தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் பழக்கம் இல்லாதது போல் உள்ளதே என்று முதலில் அனைவருக்கும் தோன்றலாம். ஆனால், படத்தை பார்த்தால், ஒவ்வொரு காட்சியும், பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு இயக்குநர் பிரசாந்த் நீல் செதுக்கியுள்ளார்.

1980 மற்றும் 2018 என இருவேறு காலகட்டங்களில் நகர்கிறது படம். கேஜிஎஃப் என்றால் கோலாக் கோல்டு ஃபீல்டு, தமிழில் கோலார் தங்க சுரங்கம் அவ்வளவுதான். ஆனால், தங்க சுரங்கத்தில் வேலை செய்வோர் எவ்வளவு அடிமையாக இருக்கின்றனர். அவர்களை மீட்க நாயகன் போராடும் வலி என படத்தில் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.

கன்னட மொழியில் ஒரு பாகுபலி படம் அளவுக்கு பிரம்மாண்டமான படத்தை உருவாக்க வேண்டும் என்கிற இயக்குநரின் உழைப்பு பல இடங்களில் தெளிவாக தெரிகின்றன. அதில், வெற்றியும் கண்டுள்ளார்.

படத்தின் கதைக்களம்:

சாகும் தருவாயில் உள்ள தாய், தனது மகனிடம் நீ சாவதற்குள் பெரிய பணக்காரனாக ஆக வேண்டும். இந்த உலகில் பணம் தான் எல்லாம் என சொல்லி சாகிறார். அந்த சிறுவன், பணக்காரனாக எடுக்கும் முயற்சிகள், அதற்காக தேர்ந்தெடுக்கும் கேங்ஸ்டர் பாதை, பின்னர் அவனுக்கு வரும் ஒரு டாஸ்க், அதை முடிக்க கோலார் தங்க சுரங்கத்திற்கு செல்வது.

அங்கு ஒரு வில்லனை அழிக்க நினைத்து போகும் ஹீரோ, அது எளிய காரியம் என உணர்ந்து, அவனது பலம் மற்றும் பலவீனங்களை துல்லியமாக ஆராய்ந்து, நிதானமாக ஸ்கெட்ச் போட்டு, தாக்குவது என படம் முடிந்து விட்டது என நினைப்பவருக்கு இனி தான் ராக்கியின் (யஷ்) ஆட்டம் ஆரம்பமாகிறது. என இரண்டாவது பாகத்திற்கான லீடுடன் இயக்குநர் முடித்திருக்கும் விதம் அனைத்துமே அற்புதம்.

ஆக்‌ஷன் காட்சிகளில் யஷ், பாகுபலி வில்லன் ராணா டகுபதியையும், 300 பருத்தி வீரர்கள் ஜெரார்டு பட்லரையும் நினைவு படுத்துகிறார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள யஷ் படத்தை தமிழில் விஷால் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் யஷ்க்கு ஜோடியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், ஒரு பாடலுக்கு தமன்னாவும், மற்றொரு பாடலுக்கு நாகினி புகழ் மவுனி ராயும் வந்து குத்தாட்டம் போட்டு செல்கின்றனர்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால், லாஜிக் எல்லை மீறல்கள் தான் ஆனால், இது ஒரு கேங்ஸ்டர் மற்றும் பீரியட் காம்பினேஷன் படம் என்பதால் ஃபேண்டஸி விசயங்கள் நிறைய சேர்க்கப்பட்டுள்ளன.

பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜீரோ மற்றும் தமிழகத்தில் ஆறு பெரிய ஹீரோக்கள் படங்கள் வெளியாகியுள்ளதால், கேஜிஎஃப் படம் நினைத்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை அள்ளுமா என்பது சந்தேகம் தான்.

கேஜிஎஃப் சினி ரேட்டிங்: 2.25/5.

You'r reading பணக்காரனாத்தான் சாகணும் – கேஜிஎஃப் விமர்சனம் ! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை