வாட்ஸ்அப்பில் அனுப்புவதற்கான கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்கள்

Christmas stickers for Whats app

by SAM ASIR, Dec 22, 2018, 09:18 AM IST

டிசம்பர் என்றாலே கிறிஸ்துமஸ்தான் நினைவுக்கு வரும். வேலைகளுக்குள் அமிழ்ந்து என்ன மாதம் என்று தெரியாமல் இருப்பவர்களுக்குக்கூட வீடுகளின் முன்பு திடீரென தொங்கும் ஸ்டார்கள் டிசம்பரை நினைவுபடுத்திவிடும்.

உறவினர்களுக்கு, நண்பர்களோடு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் அருமையான வழி. அனைத்து பயனர்களும் பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் வசதியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டில் 'எப்படி?' (How to?) என்ற கேள்வியின்கீழ் அதிகம் தேடப்பட்டது 'வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்கள் அனுப்புவது எப்படி?' (How to send stickers on WhatsApp) என்பதுதான் என்று கூகுள் தேடுபொறி தெரிவித்துள்ளது.

நீங்கள் விரும்பும் புகைப்படங்களைக்கூட வாட்ஸ்அப்பில் அனுப்பக்கூடிய ஸ்டிக்கர்களாக மாற்றிக்கொள்ள முடியும். படத்தின் பின்னணி காட்சியை அழிக்கக்கூடிய ஏதாவது ஒரு background eraser செயலி மற்றும் வாட்ஸ்அப்பின் sticker maker செயலி இரண்டையும் பயன்படுத்தி வேண்டிய புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றிக் கொள்ளலாம்.

தற்போது ஆண்ட்ராய்டு பயனர்கள், ஏனைய மூன்றாம் நபர் செயலிகளிலிருந்தும் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தும் வசதியை வாட்ஸ்அப் தந்துள்ளது. இதை பயன்படுத்தி, கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் அலங்காரங்கள், புத்தாண்டு வாழ்த்துகள் போன்ற ஸ்டிக்கர்களை நீங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஃபோனிக்ஸ் சொல்யூஷன்ஸ். ஆர்வி ஸ்கொயர், மொபைல்பேக் மற்றும் சிக்ஸ் சென்ஸ் போன்ற நிறுவனங்களின் கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்களை பின்வரும் இணைப்புகள் மூலம் பிளே ஸ்டோரிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.phoenix.stickerforwhatsup

https://play.google.com/store/apps/details?id=com.RVSquare.ChristmasStickersWA

https://play.google.com/store/apps/details?id=com.mt3.wastickerapp

https://play.google.com/store/apps/details?id=com.sticker.allinonechristmas

வாட்ஸ்அப்பில் கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்களை அனுப்பி அசத்துங்க! மெர்ரி கிறிஸ்துமஸ்!

You'r reading வாட்ஸ்அப்பில் அனுப்புவதற்கான கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்கள் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை