நியூ இயருக்கு விக்ரம் அளிக்கப் போகும் சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?

Dec 26, 2018, 11:38 AM IST

விக்ரம் நடிப்பில் வித்தியாசமான படமாக உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஜனவரி 1ம் தேதி வெளியாகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் மலேசிய டானாக விக்ரம் நடித்து வரும் படம் கடாரம் கொண்டான். இந்த படத்தில் கமலின் மகள் அக்‌ஷரா ஹாசன் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகின்றன.

விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் முக்கிய அறிவிப்பு வரும் புத்தாண்டில் வெளியாகும் என இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Leave a reply