ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க சாய் பல்லவி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பலரும் போட்டியிட்டு வருகின்றனர். அயன் லேடி என்ற பெயரில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடித்து வரும் படத்தை மிஷ்கினின் துணை இயக்குநர் இயக்கி வருகிறார்.
கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக இயக்கவுள்ளார். அதில், ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
இந்நிலையில், மதராசபட்டினம், தேவி படங்களை இயக்கிய ஏ.எல். விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதில், ஜெயலலிதாவாக நடிக்க வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சசிகலா வேடத்தில் நடிக்க நடிகை சாய்பல்லவியை ஓகே செய்துள்ளார் இயக்குநர் விஜய்.
முதலில் தனக்கு முக்கியத்தும் இருக்குமா? என்ற யோசனையில் இருந்த சாய் பல்லவி, சசிகலாவின் கதாபாத்திரத்திற்கு படத்தில் இருக்கும் முக்கியத்துவம் உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.