விஷாலுக்கு விரைவில் டும் டும் டும்: ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு

Marriage for Vishal soon

by Isaivaani, Dec 31, 2018, 09:35 AM IST

நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில், செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷால். தனது எதார்த்த நடிப்பால் அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார். குறிப்பாக, சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன் என சமீபத்தில் துப்பறிவாளன், இருப்புத்திரை வரை பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பை தவிர சில படங்களையும் தயாரித்து வந்த விஷால், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.

விஷால் தான் கண்டிப்பாக லவ் மேரேஜ் தான் செய்வேன் என்றும், பெண் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் தனது திருமணம் அங்கே தான் நடைபெறும் என்றும் விஷால் பல்வேறு பேட்டிகளில் கூறினார்.

இந்நிலையில் விஷாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான நிச்சயதார்த்த பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அவரது தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்பவர் தான் மணப்பெண். பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியும் நிலையில் உள்ளதால், விஷாலின் திருமணம் அங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading விஷாலுக்கு விரைவில் டும் டும் டும்: ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை