பெண்ணாக கதிர்.. சிகை டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Sigai Movie Trailer released by Vijay Sethupathy today

by Isaivaani, Jan 4, 2019, 13:55 PM IST

நடிகர் கதிரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் சிகை திரைப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.

காக்க முட்டை புகழ் இயக்குனர் மணிகண்டனின் உதவியாளர், ஜகதீசன் பாபு சிகை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் கதிர், பிக்பாஸ் பிரபலம் ரித்விகா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர, மயில்சாமி உள்பட 9 பேர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா திரும்பும் ஒரு இளைஞனின் வாழ்க்கை ஒரே நாளில் எப்படி மாறுகிறது என்ற கருவில் பல திருப்பங்களுடன் கதை உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதையில் கதிர் பெண்ணாக நடித்துள்ளார்.

சிகை திரைப்படம் ஏற்கனவே ஆல் லைட்ஸ் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிகை படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சிகை டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன், நடிகர் கதிர் மற்றும் சிகை திரைப்பட குழுவிற்கு வாழ்த்துகளையும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

சிகை திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய அனுமதி இல்லாததால், வரும் 9ம் தேதி ZEE5  டிஜிட்டல் தளத்தில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பெண்ணாக கதிர்.. சிகை டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை