ரூ. 2000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டதால் அந்த நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்படப்போவதாக நாடு முழுவதும் பரபரப்பான பேச்சாகியுள்ளது.
தேவைக்கு அதிகமாகவே 2000 ரூபாய் நோட்டு இருப்பில் உள்ளதாலேயே அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகையில், தற்போதைக்கு தேவைக்கு அதிகமாகவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருப்பில் உள்ளது. நாட்டில் மொத்த புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அளவு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
அதனால் தான் மேற்கொண்டு தற்போதைக்கு அச்சடிக்க வில்லை. நிரந்தரமாக அச்சடிப்பதை நிறுத்தப் போவதாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கார்க் தெரிவித்துள்ளார்.