`ராக் ஸ்டார் பாஷிம் பதக்.. வீரர்களை விஞ்சி வைரலான அம்பயர்!

IPL Umpire Paschim Pathak goes viral

by Sasitharan, Oct 24, 2020, 18:49 PM IST

நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு இணையாக அம்பயர் ஒருவர் புகழ்பெற்று வருகிறார். அவரின் பெயர் பாஷிம் பதக். இவரை ராக் ஸ்டார் பாஷிம் பதக் என நெட்டிசன்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த திடீர் வைரலுக்கு காரணம் அவரின் நீண்ட தலைமுடிதான். களத்தில் நீண்ட தலைமுடியுடன் அவர் உற்று பார்த்து முடிவுகள் சொல்வது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போக இப்போது மனுஷன் உலக பேமஸ்.

இந்த ராக் ஸ்டார் பாஷிம் பதக்கின் சொந்த ஊர் மும்பை. இதற்கு முன்பு, உள்ளூர் போட்டிகளில் அம்பயராக செயல்பட்ட போதே அம்பயர்களுக்கு காயம் ஏற்பாடமல் தடுப்பதற்காக ஹெல்மெட் அணிந்துவந்து அம்பயர் பணி செய்து அனைவராலும் பேசப்பட்டார்.

இந்த நிலையில்தான் இந்த சீஸன் ஐ.பி.எல் தொடரில் நடுவராக செயல்படும் வாய்ப்பு பதக்கிற்கு வந்தது. இதில் தனது ஸ்டைலிஷ் தோற்றதால் ரசிகர்களிடையே நல்ல பரிட்சயம் ஆகி இருக்கிறார். கடந்தவாரம் நடந்த கொல்கத்தா - ஹைதராபாத் இடையிலான போட்டியில் பாஷிம் பதக் தன்னுடைய நீண்ட முடியால் பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

More Cricket News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை