அதிர்ச்சி.... ஆச்சர்யம்... கோலி ரன் அவுட்டுக்கு என்ன ரியாக்சன்!

by Sasitharan, Dec 17, 2020, 22:22 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாவது பந்தில் ப்ரித்வி ஷா அவுட்டாக, புஜாராவுடன் கேப்டன் கோலி கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புதிய பந்தின் துவக்கத்திற்கு முன்னர் புஜாரா (43) அவுட்டாகி வெளியேறினார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரகானே இருவரும் அணியைச் சரிவிலிருந்து மீட்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கோலியை ரன்னிற்கு அழைத்து, பின்னர் வேண்டாம் என்று ரன் அவுட் ஆக்கினார் ரகானே. ரன் அவுட் ஆனபின் அமைதியாக சென்றார் கோலி. இதுதொடர்பாக பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், “அந்த பந்தில் ரன் எடுக்கவே முடியாது. ஃபீல்டர் மிக அருகில் இருந்தாலும் தனது பார்ட்னரின் அழைப்பை தட்டாமல் ரன் எடுக்க முன் வந்தார் கோலி. பார்ட்னர் மீது தவறு இருந்தும் அவரிடம் கோபிக்காமல் கோலி அமைதியாக பெவிலியன் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது" எனக் கூறியுள்ளார்.

இதேபோல், ஷேன் வார்னே, ``கோலி மாதிரியான மகத்தான பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆவதை பார்ப்பது மனதுக்கு வருத்தம் தருகிறது. என்னைப் போன்ற கிரிக்கெட் பிரியர்கள் இதற்காக விம்மி தலைகுனிய வேண்டும்” என ட்விட்டரில் தெரிவித்தார்.

You'r reading அதிர்ச்சி.... ஆச்சர்யம்... கோலி ரன் அவுட்டுக்கு என்ன ரியாக்சன்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை