ரிசப் பன்ட் குறும்பு தனத்தால் கடுப்பான மேத்தேயூ வேட்.. உடல் எடை குறித்து கேலி!

by Sasitharan, Dec 28, 2020, 20:11 PM IST

ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்தேயூ வேட் இந்திய வீரர் ரிசப் பன்ட்டின் உடல் எடை குறித்து கேலி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 131 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

இதற்கிடையே, போட்டிகள் நடைபெறும் போது இரு அணி வீரர்கள் வார்த்தைகளால் போரிடுவது வழக்கம்தான். இருப்பினும், ஸ்லெட்ஜிங் செய்வதற்கு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வது வழக்கமான விஷயம்தான். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இணையாக நமது வீரர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். ஆனால், வார்த்தை போர் சற்று நிமிடத்தில் தனிந்து விட்டது.

குறிப்பாக, ரிசப் பன்ட்- ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இடையேயான `பேபி சிட்டர்' உரையாடல், அதன்பிறகு பெய்ன் குழந்தையோடு பன்ட் போட்டோ எடுத்துக் கொண்டதெல்லாம் இருநாட்டு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், ரிசப் பன்ட் வழக்கம் போல் தனது குறும்பு தனத்தில் ஈடுபட்டார். சிரித்து கொண்டே மேத்தேயூ வேடை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். ஆனால், மேத்தேயூ வேட் இதை வேறு விதமாக புரிந்து கொண்டார். ரிசப் பன்டை உடல் எடை குறித்து மேத்தேயூ வேட் விமர்சனம் செய்தார்.

25-30 கிலோ கூடுதலாக இருப்பாயா? எடையைக் எப்போது குறைக்கப் போகிறாய். பெரிய ஸ்கிரீனில் உன்னைப் பார்க்கிறாயா? என்று வேட் கேலி செய்தார். தேநீர் இடைவேளையின்போது அதைப் பற்றி வேடிடம் கேட்டதற்கு, பின்னால் நின்றுகொண்டு பன்ட்`` ஏன் சிரித்துக்கொண்டே இருக்கிறார் என்று தெரியவில்லை. என் பேட்டிங் சிரிக்கும்படி இருக்கிறதோ என்னவோ” என்று கூறியிருந்தார். இருப்பினும், வார்த்தை போர் வரம்பு மீறத் தொடங்கியுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading ரிசப் பன்ட் குறும்பு தனத்தால் கடுப்பான மேத்தேயூ வேட்.. உடல் எடை குறித்து கேலி! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை