காலையில் ஷூ லேஸை கூட கட்ட முடியாமல் இருந்தார்.. ப்ரீத்தி அஷ்வின் டுவிட்டரில் உருக்கம்!

by Sasitharan, Jan 11, 2021, 20:43 PM IST

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. சிட்னியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி சமனில் முடித்துள்ளது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது.

இதற்கு முக்கியமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விகாரி மற்றும் அஷ்வினின் கூட்டணி ஆட்டம்தான் என்று அனைவருக்கும் தெரிந்தது. போட்டியின் 2வது இன்னிங்ஸில் 128 பந்துகளுக்கு 39 ரன்கள் அஷ்வின் எடுத்தார்.

இந்நிலையில் அஷ்வினின் வெற்றிகரமான ஆட்டத்திற்கு பிறகு அவரது மனைவி ப்ரீத்தி அஷ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில், பயங்கர முதுகு வலியுடன் நேற்று இரவு தூங்க சென்றிருந்தார்.இன்று காலை எழுந்திருத்த போது அவரால் நேராக நிற்கவே முடியவில்லை. குனிந்து ஷூவின் லேஸை போடவே சிரமப்பட்டார். ஆனால் இன்றைய ஆட்டத்தின் மூலம் அனைவரையும் ஆச்சரியிக்க செய்தார் என்று பதிவிட்டிருந்தார்.

அதே ட்வீட்டை மீண்டும் ரீ ட்வீட் செய்த அவர் மூட்ட முடிச்சுகளை எடுத்துக்கட்ட இப்போது எனக்கு யார் உதவுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

More Cricket News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை