குடியரசுத் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்து செய்தி சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இன்று 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் குடியரசுத்தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டர் பக்கத்தில், இனிய குடியரசு நாள் மற்றும் குடியரசு நாள் என்ற ஹேஷ்டேக்கை கேப்ஷனாக பதிவிட்டு மீம்ஸ் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இந்த மீம்சில், ஒன்றின் கீழ் ஒன்றாக மூன்று படங்கள் இடம்பெற்றுள்ள அந்த மீம்ஸில் சிறுவன் ஒருவன், உலக வரைப்படத்தை சுட்டிக்காட்டி பிரேசில் எங்குள்ளது? பிரான்ஸ் எங்குள்ளது? என்பது மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். மேலும், சிறுவனிடம் இந்தியா எங்குள்ளது? என்றதும் தனது வலது கையால் தனது நெஞ்சை அணைத்து நெஞ்சாங்கூட்டில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறான். வாசிம் ஜாபரின் இந்த மீம்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.