இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 125 வீரர்கள் வெளிநாட்டினை சார்ந்தவர்கள். இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களை விட அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டனர். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகையான ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். அதுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா பந்து வீச்சாளரான ஜெய்ல் ரிச்சர்ட்சன்னை ரூ.15 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. கடந்த சீசனில் பஞ்சாப் அணியால் 10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் 13 போட்டிகளில் விளையாடி 113 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
மேலும் அந்த தொடரில் ஒரு சிக்சர் கூட அவர் அடிக்கவில்லை எனவே பஞ்சாப் அணியில் இருந்து அவர் கழட்டி விடப்பட்டார். ஆனால் இந்த 2021 சீசனில் மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூர் அணி. இந்த சீசனின் ஏலத்தில் சிறப்பான ஏலத்தை சென்னை அணி நடத்தியுள்ளதாக கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இந்த மாதிரியான முடிவுகள் தான் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்றும் புகழ்ந்துள்ளார். கடந்த சீசன் சென்னை அணி சொல்லி கொள்ளும் அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. சுரேஷ் ரெய்னாவின் விலகல், தொடக்க ஆட்டக்காரர்களின் சொதப்பல் என தொடர் முழுவதுமே சென்னை அணி தனது திறமையை நிரூபிக்கவில்லை.
மேலும் தொடர் முடிந்தவுடன் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் ஓய்வை அறிவித்தார். இதனால் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டக்காரரும் , ஹர்பஜன் சிங் பதில் மாற்றுவீரரும் தேவைப்பட்ட நிலையில், 2021 ஏலத்தின் தொடக்கத்தில் சென்னை அணி மேக்ஸ்வெல்லை அணியில் எடுப்பதற்கு பெங்களூர் அணியுடன் போட்டி போட்டது. ஆனால் கடைசியில் அந்த போரில் மேக்ஸ்வெல் என்ற ஆயதத்தை பெற்று ஏலப்போரில் வெற்றி பெற்றது பெங்களூர் அணி. ஆனால் அந்த தொகைக்கு சென்னை அணி கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் மொயின் அலியை அணியில் எடுத்து அசத்தியுள்ளது. இந்த அணி தேர்வு சிறப்பானது என கௌதம் புகழ்ந்துள்ளார்.