கோவையில் ஏ.டி.எம். அறை ஒன்றில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கோவை தண்ணீர் பந்தல் சாலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். ஒன்று உள்ளது. பரபரப்பான சாலையில் அந்த ஏ.டி.எம். உள்ளதால் அதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவர். இந்த சூழ்நிலையில், அந்த ஏ.டி.எம்.-ல் பணம் சென்ற வாடிக்கையாளர்கள் அந்த அறையில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சில வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
வாடிக்கையாளர் ஒருவர் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாம்பு இருக்கும் தகவலை தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் ஏ.டி.எம். அறைக்குள் தைரியமாக நுழைந்து பாம்பை தேடி கண்டுபிடித்து பிடித்தார்.
சுமார் 4 அடி நீளமுள்ள அந்த பாம்பு சீறி வண்ணம் இருந்தது. ஆனால் பாம்பு பிடிப்பவர் அதனை லாவமாக வெளியே கொண்டு வந்தார். பின் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டதாக தகவல். பாம்பு பிடிப்பவர் ஏ.டி.எம். அறையில் பாம்பு பிடிக்கும் காட்சி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.