தூக்கு தண்டனை மசோதா நிறைவேற்றிய நிலையில் 8 வயது சிறுமி பலாத்காரம்

Dec 6, 2017, 15:59 PM IST

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச சட்டமன்றத்தில் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை மசோதா நிறைவேற்றிய இரண்டே நாளில், 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய பிரதேசத்தில், 12 வயதிற்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் கடந்த திங்கட்கிழமை மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றிய இரண்டு நாட்களில் டெபுலூர் தெஹில் மாவட்டத்தில் உள்ள சந்தர் என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் சந்தீப் சாங்லால்(19). சிறுமியின் வீட்டிற்கு சென்ற இவர், சக குழந்தைகளுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை.இந்த சமயத்தில் மற்ற குழந்தைகளை வெளியில் அனுப்பிய சந்தீப், சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி உள்ளார்.

பின்னர், சிறுமியின் அத்தை எதார்த்தமாக வீட்டிற்கு வந்தபோதுதான் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து பெற்றோருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Crime News


அண்மைய செய்திகள்