டெல்லி: மாதந்தோறும் வீடுகளுக்கு சிலண்டர்கள் விநியோகம் செய்யும் முறைக்கு மாற்று வழி வந்துவிட்டது. ஆம். நம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி காஸ் சிலிண்டருக்கு மாற்றாக ஒவ்வொரு வீட்டிலும் டாங்க் போன்ற வடிவம் அமைத்து அதன் மூலம் எரிவாயு பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதாவது, எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் சொந்த செலவில் ஒவ்வொரு வீட்டிலும் டாங்க் போன்ற வடிவம் அமைக்கப்படும். அதன் பிறகு, டாங்கில் நிறப்பிய எரிவாயுவை வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் வடிக்கையாளர்கள் எவ்வளவு எரிவாயுவை பயன்படுத்துகிறார்களோ அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். இதற்காக, எரிவாயு நிரப்பிய டாங்கில் ஸ்மார்ட் மீட்டரும் பொருத்தப்படும். இதில், எரிவாயு பயன்பாட்டின் அளவை காண்பிக்கும். அளவிற்கு ஏற்ப பணம் செலுத்தினால் போதும். இதனால் முழு சிலிண்டருக்கும் பணம் செலுத்தாமல், பயன்படுத்திய எரிவாயுவிற்கும் மட்டும் பணம் செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது.
இத்திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை கென்யன் நிறுவனம் தயார் செய்து வருகிறது. திட்டம் அமல்படுத்துவதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் எரிவாயுவை பயன்படுத்தும் முறையை அதிகப்படுத்துவதற்கான மாதிரி திட்டத்தை விரைவில் கொண்டுவர மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.