நெல்லை சிலை கடத்தல்.. காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன்..

Sep 19, 2018, 19:43 PM IST

கடந்த 2005 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநதார் கோவிலில் அனந்த நடராஜ சிலையுட்பட 13 சிலைகள் கடத்தப்பட்டன, இதில் பரமசூரியன் என்பர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கினார், விசாரனை நீதிமன்றத்தாள் சிறையில் அடைக்கப்பட்ட அவர் தாம் நிரபராதி என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்துள்ளார், இன்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரணையில் ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் விசாரிக்கப்பட்ட தீனதயாளன், சுபாஸ்கபூர் மற்றும் மும்பையை சேர்ந்த வள்ளப பிரகாசுக்கும் இதில் தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


கடந்த 2005ஆம் ஆண்டு பழமையான ஐம்பொன் சிலைகளை மாரிசாமி மற்றும் பரமதுறை திருடி தீனதயாளனுக்கு விற்பனை செய்தனர், தீனதயாளன், சுபாஸ்கபூர் மற்றும் மும்பையை சேர்ந்த வள்ளப பிரகாசு இந்த சிலைகளை லண்டனில் விற்றுவிட்டனர்.

2005 ஆம் ஆண்டு இந்த சிலை கடத்தல் வழக்கில் விசாரித்த போலீஸ் டி.எஸ்.பிக்கள் காசிம், காதர் பாஷா மற்றும் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியேர் விசாரணை செய்து இதில் இவர்கள் தீனதயாளன், சுபாஸ்கபூர் மற்றும் மும்பையை சேர்ந்த வள்ளப பிரகாசு, மாரிசாமி, பரமதுறைக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலிஸ் அதிகார்கள், மாரிசாம மற்றும் பரமதுறையை மட்டும் விசாரித்து, தீனதயாளனிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களின் கும்பளை விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை முடித்து வைக்க அவர்களே சினிமா பானியில் நாடகம் அமைத்து போலி சிலைகளை தயார் செய்து அதனை கொண்டு கோயிலில் சேர்பவர்க்கு ஒரு லட்டசம் கூலி என்று கூறி மாரிசாமி மூலமாக தேனீர் கடையில் வேலை செய்யும் பரமசூரியணை ஜோடிக்கப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிகளே மாட்டிவிட்ட தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரணையில் வெளியாகியுள்ளது.

இதனை தொடந்து சிலை திருடப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காசிஃப், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டி.எஸ்.பி காதர் பாட்ஷா, மாதவரம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோருக்கும் விசாரணையில் ஆஜராகுமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

You'r reading நெல்லை சிலை கடத்தல்.. காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன்.. Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை