காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!

டெல்லியில் காதலி வேறு ஒரு நபருடன் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணை துண்டுதுண்டாக வெட்டிக் கொலை

by Vijayarevathy N, Sep 26, 2018, 11:36 AM IST

டெல்லியில் காதலி வேறு ஒரு நபருடன் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணை துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள நிஜாம் நகரை சேர்ந்தவர் ரிஸ்வான் கான் (20). இவரும் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், அந்த பெண் வேறு ஒரு நபருடன் நட்புடன் பழகி வந்தார்.

இதனையறிந்த ரிஸ்வான், நீ அவனுடன் பேசாதே என தனது காதலியிடம் எச்சரித்துள்ளார். இதனைக்கேட்காத அந்த பெண் அந்த வாலிபருடன் தொடர்ந்து பேசி பழகி வந்தார்.

இதனால் கடும் கோபமடைந்த ரிஸ்வான், அந்த பெண்ணை குத்தி கொலை செய்தான். ஆனாலும் அந்த பெண் மீது ஆத்திரம் தீராத ரிஸ்வான், பெண்ணின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி ஒரு பையில் போட்டு அதனை சாக்கடையில் வீசிவிட்டு சென்றுள்ளான்.

இதனையறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் சைக்கோ ரிஸ்வானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடா நட்பு கேடாய் விளையும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு மிகச்சரியான எடுத்துக்காட்டாக உள்ளது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை