தமிழக செவிலியர்களுக்கு 740 பணியிடங்கள்-அமைச்சர் விஜயபாஸ்கர்

by Manjula, Sep 26, 2018, 11:46 AM IST

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 740 செவிலியர் பணியிடங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற இதன் திறப்பு விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டரை திறந்துவைத்தார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த பழைய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி அகற்றப்பட்டு ரூ.6 கோடி மதிப்பில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகள் கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் அரை மணி நேரத்தில் எடுக்க வேண்டிய பரிசோதனையை 10 நிமிடத்திற்குள் செய்ய முடியும். மேலும் தமிழகத்திலேயே முதல் முறையாக ரூ.18 கோடியில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய அதிநவீன கருவி இன்னும் 4 மாதத்திற்குள் நிறுவப்பட உள்ளது. மேலும் ரூ.150 கோடியில் கட்டப்பட்டு வரும் ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை வெகு விரைவில் திறக்கப்படும்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 740 செவிலியர் பணியிடங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும். மேலும் 3,300 செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

You'r reading தமிழக செவிலியர்களுக்கு 740 பணியிடங்கள்-அமைச்சர் விஜயபாஸ்கர் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை