மும்பையில் உள்ள கமலா மில்லில் திடீர் தீ விபத்து: 14 பேர் பரிதாப பலி

by Isaivaani, Dec 29, 2017, 08:48 AM IST

மும்பை: மும்பையில் உள்ள கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், உள்ளே சிக்கி இருந்த 14 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் லோயர் பரேலில் அமைந்துள்ள கட்டிடத்தில் கமலா மில்ஸ் உள்ளது. இந்த மில்லின் 3வது மாடியில் இன்று நள்ளிரவு 12.30 மணிகு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், தண்ணீர் லாரிகளும் அங்கு விரைந்து வந்து, தீயை அணைக்க வீரர்கள் போராடினர். பின்னர், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி, 14 பேர் உடல் கருகி பலியாயினர். மேலும், பலத்த தீக்காயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை