பாரம்பரிய விதை காப்பாளர் நெல் ஜெயராமன் மரணம்!

Nel jayaraman Passed away who he

by Devi Priya, Dec 5, 2018, 18:53 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றி வருவதற்காக தேசிய,மாநில விருதுகளை பெற்ற நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை  மருத்துவமனையில் காலமானார்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் 169 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றும் முயற்சியில் களத்தில் இறங்கியவர் ஜெயராமன். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி அரிய வகை நெல்களை பிரபலப்படுத்துவார். இதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். 2011- ம் ஆண்டு சிறந்த கரிம விவசாயிக்கான மாநில விருதை பெற்றார். அதன்பின், 2015-ம் ஆண்டு சிறந்த மரபணு ரட்சகர் தேசிய விருது பெற்றார்.

கடந்த 2 ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரின் சிகிச்சைக்கு பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், திரைப்பட பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்தனர். தமிழக அரசு நெல் ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தது.

எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணிக்கு காலமானார்.

You'r reading பாரம்பரிய விதை காப்பாளர் நெல் ஜெயராமன் மரணம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை