உலகத்தில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனாவின் அறிகுறிகள் மக்களே உஷார்

corona symptoms in tamil

by Logeswari, Aug 29, 2020, 16:34 PM IST

சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியியாவில் ஆறு மாத காலமாக வாழ்ந்து வருகிறது. கொரோனாவின் பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர்.கொரோனா பீதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் இதுவரைக்கும் எந்த தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா மக்களிடையே எப்படி பரவுகிறது என்பது மாயமாக உள்ளது.நாளுக்கு நாள் கொரோனாவின் ஆட்டம் அதிகரித்து வருவதால் அதனின் அறிகுறி பட்டியலும் நீண்டு வருகின்றது.கொரோனாவின் அசாதாரண அறிகுறிகளை பின் வருமாறு காணலாம்.

கொரோனாவின் பொதுவான அறிகுறிகள்:-

கொரோனா ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாக பாதிக்கிறது. வறட்டு இருமல்,காய்ச்சல்,உடல் சோர்வு,மூச்சு திணறல் ஆகியவை மக்களை பாதிக்கும் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

மிதமான அறிகுறிகள்:-

கொரோனா தொற்று அதிகரித்த போது வேறு சில அறிகுறிகளை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

  • கால் வலி
  • தொண்டை வலி
  • வயிற்று போக்கு
  • தலைவலி
  • சுவை அல்லது வாசனை இழப்பு
  • காய்,கால் நிற மாற்றம்.

கடுமையான அறிகுறிகள்:-

ஒருவருக்கு கொரோனா தொற்று தீவிரமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் :-

  • சுவாசிப்பதில் சிரமம்
  • மார்பு வலி
  • பேச மற்றும் நகர முடியாமை .

இம்மூன்று அறிகுறிகளை ஏதாவது நீங்கள் உணர்ந்தால் மருத்துவர்களை ஆலோசிப்பது முக்கியமானது .காய்ச்சல் ஏற்பட்டால் உங்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி கொள்வது அவசியம்.

You'r reading உலகத்தில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனாவின் அறிகுறிகள் மக்களே உஷார் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை