பெண் பிள்ளைகள் என்றாலே அதிர்ஷ்டம் மட்டுமே!!

girls is the most luckiest person in world

by Logeswari, Aug 29, 2020, 16:56 PM IST

பெண்கள் என்றாலே அவளை சுற்றி நிறைய கடமைகள்,பொறுப்புகள் வரிசையில் காத்து கொண்டிருக்கும்.முப்பெரும் காலத்தில் பெண் குழந்தையை பெற்று எடுத்தாலே அதிர்ஷ்டம் இல்லை என்ற நிலை சூழப்பட்டதால் பெண் பிள்ளைகளுக்கு பல விதமான துயரங்களை தண்டனையாக விதித்தனர்.அன்று இருந்த காலம் மருவி பெண் பிள்ளை பிறந்தாலே”வீட்டிற்க்கு மஹாலட்சுமி அவதரித்துள்ளார்”என்று சொந்தங்களால் போற்றி பாடி வரவேற்க படுகின்றனர்.

இவற்றைக்கு காரணம், பெண் பிள்ளையின் பொறுமை என்கின்ற மென்மையான குணம் மட்டுமே….அப்படி பட்ட பெண் பிள்ளையின் சில அதிர்ஷட குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
பெண்களின் உள்ளங்கால்கள்:-

பெண் பிள்ளையின் இடதுக்க்கால் பாதமோ அல்லது வலது பாதமோ முக்கோண வடிவில் ஏதேனும் குறி தென்ப்பட்டால் அக்குழந்தை வருங்காலத்தில் மிக புத்திசாலியாகவும்,பிறப்பிலேயே பரிந்துணர்வு போன்ற குணத்தில் பிறந்திருக்க கூடும் என்பது நீதி…

பெண்களின் தொப்புள்கள்:-
நம் அன்னையின் தொப்புள் கொடிமூலமாக தான் ஒவ்வொரு உடலும் உயிர் பிழைப்பதற்கு காரணமாக விளங்குகிறது.அத்தகைய சிறப்பு மிக்க இடமான பெண்களின் தொப்புளில் மச்சம் இடம்பெற்று இருந்தால் அப்பெண் வளமான வாழ்க்கையை வாழ நேரிடும்.அதுமட்டும் இல்லாமல் எந்த வித கடினமான தருணங்களில் கூட அதிர்ஷ்டம் என்ற கருவியை கொண்டு தொட்டது எல்லாம் பொன்னாக்க கூடும்.


பெண்களின் பாதத்தில் உள்ள எல்லா விரல்களை விட கட்ட விரல் அகலமாக காணப்பெற்றால் வாழ்க்கையில் கஷ்டம் என்ற துயரம் நம்மை சிறுது கூட சீண்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.பெண்கள் அழகாக இல்லை என்றாலும் அவர்கள் பெரியவர்களிடம் வெளிப்படுத்தும் அடக்கம்,அன்பு,பாசம் முதலியவற்றை மூலம் மற்றவர்களின் கண்களுக்கு வெகு அழகாக தோன்றுவாள்.

பெண்களின் மூக்கில் மச்சம் அல்லது மரு இருந்தாலோ...வருங்காலத்தில் மிகுந்த செல்வ மகளாக திகழ்வாள்.அவள் இருக்கும் இடம் எல்லாம் அதிர்ஷ்டம் நிறைந்திருக்க கூடும் என்பது நியதி..

இடது கன்னத்தில் மச்சம்:-

பெண்களின் அழகான கன்னத்தில் மீண்டும் அழகை சேர்க்கும் வகையில் மச்சம் இருப்பினும் அப்பெண் கண்டிப்பாக உணவு விரும்பியாக மட்டுமே இருக்க முடியும்.அதுமட்டும் இல்லாமல் சமைப்பதிலும் அவர்களே நம்பர்.1 ஆக திகழ்கின்றனர்.

பெண்களின் வெளி அழகை மட்டும் ரசிக்கும் ஆண்களுக்கு அவர்களின் மனது எவ்வகை அழகானது என்பது அவர்களின் மதிக்கு புலப்படுவது சற்று கடினம்.ஆதலால் பெண்களை 'ஒரு கவர்ச்சி பொருளாக'மட்டும் எண்ணாமல் அவளுக்கும் 'சுய மரியாதை' இருக்கும் என்பதை உணருங்கள்.

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை