பிரபல நடிகர் மகள் எழுப்பும் உரிமைக்குரல்.. தமிழர்களுக்கு 70 சதவீதம் வேலை வாய்ப்பு..

Advertisement
பிரபல நடிகர் சத்யராஜின்‌ மகள்‌ திவ்யா சத்யராஜ்‌ ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌, அவர்‌ சமீபத்தில்‌ கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவிவசாயிகளுக்கு அரசாங்கம்‌ நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்‌ என்று விவசாய துறை அமைச்சரிடம்‌ கேட்டுக்கொண்டார்‌. வறுமைக்‌ கோட்டிற்குக் கீழ்‌ இருப்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த“மகிழ்மதி" என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.
மகிழ்மதி இயக்கம்‌ சார்பாக அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்‌. அதில் கூறியிருப்பதாவது:கொரோனா ஊரடங்கு காரணமாகப் பல கம்பெனிகள்‌ பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்‌ அந்த கம்பெனிகளில்‌ வேலை செய்யும்‌ தொழிலாளர்களுக்கு சம்பளம்‌ தர முடிய வில்லை. பல தொழிலாளர்கள்‌‌ வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்‌. வேலை வாய்ப்புகளும்‌ குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில்‌ வேலை வாய்ப்புகளில்‌ 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்‌. தமிழ்நாட்டில்‌ தமிழர்கள்‌ புறக்கணிக்கப்படுவதும்‌ ஒதுக்கப்படுவதும்‌ நியாயம்‌ கிடையாது. அனைத்து துறைகளிலும்‌ வேலைவாய்ப்புகளில்‌ 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க தமிழக அரசாங்கம்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இந்த கோரிக்கை விஷயமாகத் தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை அமைச்சர்‌ நிலோபர்‌ கபில்‌ அவர்களை விரைவில்‌ சந்திப்போம்‌.”இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறி உள்ளார்.
திவ்யா சத்யராஜ் ஏற்கனவே குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்குவது பற்றியும் பள்ளி குழந்தைகள், ஏழை குழந்தைகளுக்கு கூடுதலான சத்துள்ள உணவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அவசியத் தேவைகளை அரசுக்குத் தெரிவித்து கடிதம் எழுதியும் அமைச்சர்களை நேரில் சந்தித்தும் கோரிக்கைகள் கொடுத்திருக்கிறார்.
சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் நடிப்பு துறையைத் தேர்வுசெய்து அதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால் சத்யராஜ் மகள் திவ்யா டாக்டருக்கு படித்திருப்பதுடன் சமூக அக்கறையுடன் தனது செயல்பாட்டை அமைத்துக்கொண்டிருக்கிறார்.
Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>