முருங்கை கீரை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன??

by Logeswari, Jan 13, 2021, 21:14 PM IST

முருங்கை கீரையில் இயற்கையாகவே ஆரோக்கிய குணங்கள் அதிகமாக உள்ளது.இந்த கீரையில் உடலின் நன்மைக்கு தேவையான எல்லா வைட்டமின்களும் உள்ளது. முருங்கை கீரையை பறித்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் ஆகியவை சேர்த்து 10-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். 20 நிமிடம் கழித்த பிறகு முருங்கை கீரை ஒரு சூப் போன்ற பதத்திற்கு மாறி விடும்.இதை தினமும் குடித்து வந்தால் சளி, உடல் வலி போன்ற நோய்கள் நம் உடலை நெருங்க அஞ்சும். அதுவும் இந்த கொரோனா காலத்திற்கு எற்ற ஆரோக்கியமான குடினீராகும். ஆதலால் இதனை தினமும் வழக்கமாக்கி கொள்ளுங்கள். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடையும் குறையும்.

முருங்கை கீரை சூப் அல்லது சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:-
தினமும் நம் உடலில் முருங்கை சாறு ஊறுவதால் தோல் நோய் ஆகியவை எதாவது இருந்தால் தானே சரி செய்து கொள்ளும் குணம் இதற்கு உண்டு. முருங்கை இலையை நாம் சாப்பிட்டும் உணவிலும் சேர்த்து கொள்ளலாம் அல்லது தனியாக சூப்பாகவும் சமைத்து பருகலாம்.
காய்கறிகளில் இருக்கும் வைட்டமினை விட முருங்கை கீரையில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. ஆதலால் யாருக்கெல்லாம் உடலில் வைட்டமின் சி குறைபாடுகள் இருக்கோ அவர்கள் தயங்காமல் முருங்கை கீரையை தினமும் தாங்கள் சாப்பிடும் வழிமுறைகளில் சேர்த்து கொள்ளலாம்.

முருங்கை கீரையில் இயற்கையாகவே ஐயன் சக்தி உள்ளதால் எலும்புகள் எல்லாம் வலிமை பெறும்.சிலர் பார்க்கத்தான் குண்டாக இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு உடல் வலிமை கொஞ்சம் கூட இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு எலும்புகள் வலிமையாக இல்லை என்பது அர்த்தம்.இதனால் தினமும் முருங்கை கீரை சாப்பிட்டால் ஐயன் சக்தி மேம்படும்.இதனால் எலும்புகளும் வலிமை பெறும். காலையில் முருங்கை சாறு குடிப்பதால் ஆஸ்துமா போன்ற பெரிய நோய்களில் இருந்து கூட விடிவு பெறலாம். நாம் சாப்பிடும் முறையில் தான் உடல் ஆரோக்கியமும் வளரும். ஆதலால் சாப்பிடும் உணவை ஆரோக்கிய உணவாக தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்…

You'r reading முருங்கை கீரை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை