கலர் கலரா சாஸ்! வித விதமா நோய்! அதிர்ச்சி ரிப்போர்ட்.

சாஸ் உணவுக்கு தேவையில்லாத ஒன்று

by Vijayarevathy N, Oct 6, 2018, 20:33 PM IST

இக்காலத்தில் உணவிற்கு சாஸ் தொட்டுக் கொள்பவர்களை விட சாஸ்காக உணவை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

சாஸ் சாப்பிடுவதற்கு சுவையாக தெரிந்தாலும் அதனால் ஏற்படும் விளைவு அதிகம். மருத்துவர்கள் பல முறை எச்சரித்தும் சாஸ் உண்ணும் பழக்கத்தை மக்கள் விட்ட பாடில்லை.

தக்காளி சாஸ், ரெட் சில்லி அல்லது கிரீன் சில்லி சாஸ் என விதவிதமா கலர் கலரான சாஸ்களும், உணவுகளையும் பார்க்கும்போது, வயிறு சாப்பிடத்தான் தோன்றும்.

ஆனால், அதனை அளவோடு சாப்பிட்டால் பரவாயில்லை, தினந்தோறும் எடுத்துக்கொண்டால் தான் அதிகமான பக்கவிளைவுகள் உடலில் ஏற்படும்.

எல்லா சாஸ்களிலும் எண்ணெய், சர்க்கரை, புளிப்பு சுவைக்காக வினிகர் சேர்க்கிறார்கள். மேயனைஸ் சாஸில் முட்டையின் மஞ்சள்கரு, வினிகர், சர்க்கரை, உப்பு, கொஞ்சம் மைதா சேர்த்து தயாரிக்கிறார்கள்.

நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பதப்படுத்தும் பொருட்களை சேர்க்கிறார்கள். இவை அதிக கலோரி கொண்டவை. இதனால் கரையாத கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்ந்து பருமன் பிரச்சனையை ஏற்படுத்தும்.

ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சிவப்பு மிளகாய் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது.

பர்கர் தயாரிக்கும் போதே அதிக அளவு சாஸ் சேர்த்துதான் செய்கிறார்கள். சுவைக்கு அடிமையானவர்கள் மேலும் அதிக சாஸை ஊற்றி அதில் பர்கரைத் தொட்டு சாப்பிடுகிறார்கள்.

மேலும், சூடான சாஸ்ஸினை சாப்பிடும்போது, நாக்கு மற்றும் உணவுக்குழாயில் எரிச்சல் ஏற்படும்.

அதுமட்டுமின்றி அல்சர் பிரச்சனைகள், மேலும் உங்கள் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

இது உடல்நலத்தை எளிதில் கெடுத்துவிடும். சாஸ் உணவுக்கு தேவையில்லாத ஒன்று. சுவையைத் தவிர அதில் எந்த சத்துகளும் இல்லை.

அதனால் இதனை தவிர்ப்பதே நல்லது.

You'r reading கலர் கலரா சாஸ்! வித விதமா நோய்! அதிர்ச்சி ரிப்போர்ட். Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை