அக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் கை வைத்தியமான சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் நின்றுவிடும். சரி உங்களுக்கு சுக்கு மல்லி காபி எப்படி செய்வதென்று தெரியுமா? சரி தொடர்ந்து படியுங்கள் இங்கு சுக்கு மல்லி காபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
சுக்கு காபி பொடிக்கு:
சுக்கு – 1/2 கப்
மல்லி – 1/4 கப்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சுக்கு காபிக்கு:
தண்ணீர் – 2 கப்
சுக்கு காபி பொடி – 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால்,சுக்கு மல்லி காபி ரெடி!!!