Advertisement

ஆதரவற்றோர்களுக்கு அரசு வேலை: மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரா மாநில அரசு பணிகளுக்கான வேலை வாய்ப்பில் ஆதரவற்றோர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஆதரவற்றோர்களின் நலன் கருதி வேலை வாய்ப்பு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான கூட்டம் நேற்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதன் பிறகு, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முன்டே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தாங்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியாததால் கடும் அவதிக்குள்ளாகிவரும் ஆதரவற்றோர்கள் எந்த பிரிவின்கீழ் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால், எந்த சிறப்புபிரிவிலும் சேர முடியாமல் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களில் அவர்களுக்கு தேவையான சலுகைகளும் கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு பொதுப்பிரிவில் அரசுப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பில் ஆதரவற்றோர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இந்த வாய்ப்பின் மூலம் அவர்கள் அரசு வேலைகளை பெறுவதுடன் இதர வசதிகளையும் பெறுவார்கள்” என்றார்.

மேலும் படிக்க
free-land-in-kashmir-for-sri-lankan-cricketer-muralitharan-jammu-and-kashmir-government-in-controversy
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனுக்கு காஷ்மீரில் இலவச நிலம்: சர்ச்சையில் ஜம்மு காஷ்மீர் அரசு
what-the-police-did-in-the-middle-of-the-road-in-a-bmw
பி.எம்.டபிள்யூவில் வந்து சாலையின் மத்தியில் செய்த காரியம்... தட்டி தூக்கிய போலீஸ்
champions-trophy-betting-alone-is-worth-rs-5-000-crore-mistletoe-caught-in-delhi
சாம்பியன்ஸ் டிராபி : பெட்டிங் மட்டும் 5 ஆயிரம் கோடி டெல்லியில் சிக்கிய புல்லுருவிகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்