தமது குறைகளை உரத்த குரலில் கூறிய பெண்ணை பொது மக்கள் முன்னிலையில் சேலையைப் பிடித்து இழுத்து அதட்டிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்களிடம் குறை கேட்டார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா. அப்போது அவருக்கு எதிரே நின்று மைக் பிடித்துப் பேசிய பெண் ஒருவர் உரத்த குரலில் தமது குறைகளைக் கூறினார். அப்போது, முன் இருந்த மேஜையை அந்தப் பெண் ஓங்கித் தட்டியது தான் தாமதம், எழுந்த சித்தராமையா அந்தப் பெண்ணை நோக்கி ஆவேசமாக கை ஓங்குகிறார்.
அதில் பெண்ணின் சேலை முந்தானை சித்தராமையாவின் கையில் பட்டு நழுவி விடுகிறது. அப்படியும் அந்தப் பெண் தன் குறையை கூற முயல சித்தராமையா மீண்டும் கை ஓங்கி அடிக்கப் பாயும் காட்சிகளுடன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட பெண் ஜமீலா, என்னுடைய குறையைத்தான் கூற முயன்றேன்.
என் கை தவறுதலாக மேஜையில் பட்டதற்கு கோபமாகிவிட்டார் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இது தான் பெண்களுக்கு காங்கிரசில் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையா? என்று சித்தராமையாவின் செயலுக்கு கண் டனக் குரல்கள் எழுந்துள்ளன. சித்தராமையாவை உடனே கட்சியிலிருந்து பிரியங்கா தூக்கி எறிந்து விடுவார் பாருங்கள் என்று மற்றொருவர் கிண்டலடித்துள்ளார்.